முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அர்ச்சுனாவின் கருத்தை ஒப்புக் கொண்ட சுகாதார தரப்பு

வடக்கு மாகாண ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் சுகாதாரம் தொடர்பில் எதிர்கால
திட்டமிடல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிய நிலையில் சுகாதார தரப்பு அதனை ஒப்புக் கொண்டுள்ளது.

கிளிநொச்சியில் (Kilinochchi) நேற்று (26) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்
சுகாதாரம் தொடர்பில் குறித்த விடயம் பேசப்பட்டது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரை
நோக்கி, மாகாணம் தழுவிய எதிர்கால திட்டமிடல் உள்ளதா என கேட்டபோதே அவர் இல்லை என தெரிவித்துள்ளார்.

 எதிர்கால திட்டமிடல்

இதற்கு கருத்துரைத்த அர்ச்சுனா எம்.பி, சில இடங்களில் 2035 வரையான எதிர்கால திட்டங்கள் வரையப்பட்டுள்ள நிலையில்
நாங்கள் மாகாண ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் எதிர்கால திட்டமிடல் இல்லாமல்
அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை பேசுகிறோம். 

அர்ச்சுனாவின் கருத்தை ஒப்புக் கொண்ட சுகாதார தரப்பு | Health Sector Agreed With Archuna S Opinion

வைத்தியசாலை திட்டங்கள், வர்ணம் பூசுதல் போன்ற
சாதாரண திட்டங்களுடன் முடிந்துவிடும். அதற்கான திட்டங்களை நாங்கள் தயாரிக்க
வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், எம்மை மக்கள் பிரதிநிதிகளாக கருதாமல், துறை சார்ந்தவர்கள் எனும்
அடிப்படையில் குறித்த எதிர்கால திட்டங்களை தயாரிக்க எங்களையும் உள்ளடக்க
வேண்டும் என கோருகிறேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்

இந்நிலையில், எதிர்கால திட்டம் இல்லை என்பது கவலையான விடயம் என தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர், நாங்கள் அவ்வாறான திட்டங்களை மாகாண ரீதியில் தயாரிக்க வேண்டும்.
அதன் மூலமே நாங்கள் இலக்கை அடைய முடியும் என குறிப்பிட்டார்.

அர்ச்சுனாவின் கருத்தை ஒப்புக் கொண்ட சுகாதார தரப்பு | Health Sector Agreed With Archuna S Opinion

இந்த சபையில் நான் ஒரு விடயத்தை கூறுகின்றேன். இந்த திட்ட வரைவுகளுக்கு
அர்ச்சுனா போன்றவர்களையும் உள்ளடக்க எந்த தடையும் இல்லை. அவர்களையும் இணைத்து
மாகாணத்துக்கான எதிர்கால திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர்
கூறியுள்ளார்.

மேலும், குறித்த திட்ட வரைவை விரைவில் தயாரித்து தருவதாக வடக்கு மாகாண
சுகாதார பணிப்பாளர் இதன்போது  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.