நோயாளிகளை பணயக்கைதிகளாக பிடித்து வேலை நிறுத்தம் செய்யும் ஒரு மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நோயாளிகளை பணயக்கைதிகளாக பிடித்து வேலை நிறுத்தம்
சில தொழிற்சங்கங்களால்
நோயாளிகளை பணயக்கைதிகளாக பிடித்து வேலை நிறுத்தம் செய்யும் மோசமான செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.இதுபோன்ற நேரத்தில் வேலைநிறுத்தம் செய்வது மிகவும் நியாயமற்றது என்று அவர் கூறினார்.
சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை
“சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம், அதே நேரத்தில் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 19 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்க்கிழமை (18) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.