இஸ்ரேலுக்கும் (Israel) பலஸ்தீனத்துக்கும் (Palestine) இடையிலான போர் தற்போது உச்சம் தொட்டுள்ள நிலையில் தற்போது இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா (Hezbollah) ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது நிலவும் போரானது லெபனான் (Lebanon) வரை விரிவடைந்துள்ள நிலையில் நேற்றையதினம் (23.10.2024) இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு
இஸ்ரேல் இராணுவத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வரும் நிலையில் நேற்றிரவு நடந்த இந்த தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள அந்நாட்டு இராணுவ தலைமையகத்தின் மீது ஹிஸ்புல்லா சரமாரியாக ஏவுகணைகளை வீசியுள்ளது.
டிஜிபி ஏவுகனை
இந்த தாக்குதலுக்கு டிஜிபி ஏவுகனைகளை ஹிஸ்புல்லா பயன்படுத்தியுள்ளதாகவும் , தாக்குதலில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை எனவும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஹமாஸை அழிப்பதாக கூறி, கடந்த ஓராண்டாக பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் 40,000க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் ஓராண்டுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.