ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து தனது தந்தை லக்ஸ்மன் கிரியெல்லவின்(laxman kiriella) பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரனி கிரியெல்ல(Chamindrani Kiriella) குற்றம் சுமத்தியுள்ளார்.
தனது தந்தை தேசிய பட்டியலலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்டதாகவும், ஆனால் அவரது பெயர் இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி மாவட்டம்
எனினும், கண்டி மாவட்டத்தில் இருந்து 21 வருடங்களாக நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத பின்னணியில் தான் வெற்றி பெற்றமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பான தலைமைத்துவத்தை ஏற்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.