நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து இருக்கும் வா வாத்தியார் படம் வரும் டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதற்கு நீதிமன்றம் தற்போது தடை விதித்து இருக்கிறது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து வாங்கிய கடன் 10.35 கோடி ரூபாய் தற்போது 21.78 கோடியாக வட்டி உடன் செலுத்த வேண்டி இருக்கிறது.
அந்த பணத்தை செலுத்தாமல் வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

தடை
இந்த வழக்கு விசாரணையில் ஞானவேல்ராஜா தரப்பு வழக்கறிஞர் 3.75 கோடியை உடனே செலுத்துவதாகவும், மீத தொகைக்கு சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.
ஆனால் பல முறை வாய்ப்பு அளித்தும் கடனை செலுத்த எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை என கூறிய நீதிபதி, முழு தொகையை செலுத்தும் வரை வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என உத்தரவிட்டு இருக்கிறார்.
அதனால் வா வாத்தியார் ரிலீசுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.


