தொலைத்தொடர்பு சட்டமூலம் (Telecommunications Act) தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் (High Court) தீர்ப்பு சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) இன்று(18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொலைத்தொடர்பு திருத்த சட்டத்தின் சில பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு ஏற்ப இல்லை என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் தெரிவிப்பு
அத்துடன் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியபடி திருத்தப்பட வேண்டும் எனவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில திருத்தங்கள் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.