இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது ஹிஸ்புல்லா போலித் தங்க ஒப்பந்தத்தில் 2 மில்லியன் டொலர் மோசடி செய்ததாக கானா நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
ஹிஸ்புல்லா வழங்கிய முறைப்பாடடின் அடிப்படையில் மோசடிக்கு ஏற்பாடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 11 சந்தேக நபர்களுக்கு கானா நாட்டின் அக்ரா வட்டார நீதிமன்றம் பிணை வழங்கியதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
தங்கத்தை வழங்குவதாக உறுதியளித்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை வழங்கத் தவறியுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாஹ் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தார் என்றும் அங்கே சிலர் மோசடி செய்ய முயன்றதை அறிந்த அவர், உடனடியாக இது குறித்து அந்த நாட்டின் பொலிஸில் முறைப்பாடு செய்தார் என்றும் அவரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் அந்த அரேபிய வர்த்தகர்கள் யார்? அவரக்ள சாதாரண வர்த்தகர்கள் தானா அல்லது அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குகின்றவர்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது உண்மைகள் நிகழ்ச்சி…

