கடந்த வெள்ளிக்கிழமை லெபனானின்(lebanon) தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் மீது இஸ்ரேல்(israel) விமானப்படை நடத்திய தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா உட்பட பல தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் நஸ்ரல்லா எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பான தகவலை இஸ்ரேல் ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
நச்சுப் புகை கசிவில் மூச்சுத் திணறி உயிரிழப்பு
இதன்படி ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா இரகசிய பதுங்கு குழியில் மறைந்திருந்த போது நச்சுப் புகை கசிவில் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இஸ்ரேலின் சனல் 12 வெளியிட்டுள்ள தகவலில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா பதுங்கி இருந்த மறைவிடத்தின் மீது இஸ்ரேல் 80 தொன் வெடிகுண்டுகள் வீசப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பதுங்கு குழியில் நச்சுப் புகை கசிவு ஏற்பட்டு 64 வயதான ஹசன் நஸ்ரல்லா மூச்சுத் திணறி வேதனையில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
உடலில் காயங்கள்
ஹசன் நஸ்ரல்லாவின் உடல் அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட போது உடலில் காயங்கள் ஏதுமின்றி காணப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிடவில்லை.