முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்னகோனை கைது செய்வது எப்படி..! கிடைத்தது வழி

தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை எவ்வாறு கைது செய்யலாம் என்பதை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான நிஜாம் காரியப்பர்(Nizam Kariappar), நேற்று (11)நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

இதன்படி தேசபந்து தென்னகோன் தன்னை கைது செய்வதை இடைநிறுத்துமாறு தெரிவித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மூலம் கண்டுபிடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரிட் மனு மூலம் அவரை கண்டுபிடிக்கலாம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யும்போது தென்னகோன் சமாதான நீதிபதி முன் கையொப்பமிட்டு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும். இந்த மனுவின் மூலம் அவர் இருக்கும் இடத்தை தீர்மானிக்க முடியும்.

“தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிடியாணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்யும்போது உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். சமாதான நீதிபதி முன் சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட வேண்டும். அவர் சமாதான நீதிபதி முன் மனுவில் கையொப்பமிட வேண்டும். அந்த ஆவணம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது.

சிஐடிக்கு என்ன ஆனது

சமாதான நீதிபதியைக் கண்டு பிடித்தால், தப்பிச் சென்ற ஐஜிபியைக் கண்டுபிடிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

தென்னகோனை கைது செய்வது எப்படி..! கிடைத்தது வழி | How To Arrest Tennakoon Found A Way

சட்ட அமலாக்க அதிகாரிகள் இந்த வழியில் சிந்திக்க வேண்டும் என்று கூறிய அவர், “எங்கள் சிஐடிக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.

2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.