முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

How To Train Your Dragon திரை விமர்சனம்

2010-ம் ஆண்டு அனிமேஷன் வடிவில் வெளிவந்த How to Train Your Dragon படம்.

அப்போதே 495 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைக்க தற்போது இந்த அனிமேஷன் படத்தை 25 வருடம் கழித்து லைவ் ஆக்‌ஷனாக எடுத்து இன்று வெளியிட, இந்த லைவ் ஆக்‌ஷன் How to Train Your Dragon ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம். 

How To Train Your Dragon திரை விமர்சனம் | How To Train Your Dragon Movie Review

கதைக்களம்

பெர்க்கின் வைக்கிங் கிராமத்தில் அடிக்கடி கால்நடைகள் ட்ராகன்களால் தூக்கி செல்லப்படுகிறது. இதனால் கோபமான அந்த ஊர் தலைவர் ஸ்டோயிக் இந்த ட்ராகன்களை அழிக்க சில இயந்திரங்களை உருவாக்குகிறார்.

அதே நேரத்தில் ஊர் தலைவரின் மகனான ஹிக்கப் கொஞ்சம் பலவீனமாக உள்ளார், அதையும் ஊர் தலைவர் தெரிந்துக்கொள்கிறார். இதனால் தன் பையனை ட்ராகனுடன் மோத விடாமல் இரும்பு பட்டறையில் வேலை செய்ய வைக்கிறார்.

இந்த நேரத்தில் ட்ராகன் அட்டாக் நடக்க, அப்போது ஹிக்கப் தான் செய்த எந்திரத்தின் மூலம் ட்ராகன்களில் மிக மோசமானது என்று சொல்லப்படும் நைட் பியூரியை தாக்குகிறார்.

அடுத்த நாள் ஹிக்கப் நைட் பியூரியை தேடி செல்ல, அதன் இறக்கை ஒரு பக்கம் இழந்துள்ளது.

ஊரே ட்ராகனை கொல்ல புறப்பட ஆனால், ஹிக்கப்போ நைட் பியூரியை குணப்படுத்தி, அதன் மூலம் ட்ராகன் குணங்களை அறிந்து அதனுடன் நட்பு பாராட்ட நினைக்கும் போது இவர்களில் யார் எண்ணம் நிறைவேறியது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

2010-ல் வந்த அனிமேஷன் படத்தை லைவ் ஆக்‌ஷனில் படப்பிடித்தது செம சுவாரஸ்யம், அந்த பிரமாண்ட விஷ்வல்களை லைவ்-ல் பார்க்கும் போது அதிலும் ட்ராகன் உருவங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

அதிலும் நைட் பியூரி அட்டகாசம்.

ஹிக்கப் நைட் பியூரியிடம் பழகி அதன் குணநலன்களை கண்டுக்கொண்டு, அடுத்த நாள் ட்ராகன் வேட்டையாடும் பயிற்சியில் அனைத்து ட்ராகனையும் கட்டுப்படுத்தும் காட்சி செம கலகலப்பு.

படத்தின் விஷ்வல் ஆகவே கண்டிப்பாக பார்க்க வேண்டும், அதிலும் முதன் முதலாக நைட் பியூரி மீது அமர்ந்து ஹிக்கப் பறக்கும் காட்சி அடி தூள் விஷ்வல் தான், பெரிய திரையரங்கில் செம விருந்தாக உள்ளது.

அனிமேஷனில் நாம் பார்த்தது போலவே அதோடு உருவ ஒற்றுமை உள்ள நபர்களை நடிக்க வைத்தது இன்னும் படத்துடன் நம்மை கவர்கிறது.

அதே நேரம் படத்தை ஏற்கனவே அனிமேஷனில் பார்த்தவர்களுக்கு கொஞ்சம் அட இது தானே நடக்கபோகிறது என்ற எண்ணமும் வருவதை தடுக்க முடியவில்லை.

இசை, ஒளிப்பதிவு என அனைத்து டெக்னிக்கல் ஒர்க்-ம் சூப்பர்.

க்ளாப்ஸ்

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் அனைத்தும்.

லைவ் ஆக்‌ஷனில் இந்த படம் செம பிரமாண்டமாக உள்ளது.

நடிகர், நடிகை பங்களிப்பு.

கிளைமேக்ஸில் வரும் பிரமாண்ட ட்ராகன் மற்றும் அதனுடனான சண்டைக்காட்சி.

பல்ப்ஸ்

ஏறகன்வே தெரிந்த கதை பலருக்கும் என்பதால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறையலாம்.

மொத்தத்தில் இந்த How To Train your dragon குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் செம விருந்து தான்.

3.25/5  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.