ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் பொது வேட்பாளர் பதவியிலிருந்து நான் விலகி விட்டேன் மற்றும் வேறொரு வேட்பாளரை ஆதரிப்பதற்கு ஒப்புக்கொண்டேன் என்று வெளிவரும் தகவல்ளை நம்ப வேண்டாம் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியன் (Shanakiyan) ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் அதிருப்தியாக இருப்பதனால் என்னை அவதானமாக இருக்குமாறு பிரதி காவல்துறை மா அதிபர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு பலத்த ஆதரவு கிடைக்கவுள்ளது என்பதை குழப்புவதற்காக பலர் செயற்பட்டு வருகின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இம்முறை 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ள நிலையில் எனக்கு மட்டும் இவ்வாறான அச்சுறுத்தல் வந்துள்ளமை குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். இதற்கான பதிலை மக்களே வாக்களிப்பு மூலமாக காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நேற்று (15) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்ட அவர், தொடர்ந்தும் தெரிவிக்கையில்…..
https://www.youtube.com/embed/dGffBUi-WEk