இலங்கையின் ஜனாதிபதியாக இருந்து மக்களுக்கு நல்ல சேவையினை செய்த ஜனாதிபதிகள், தங்கள் ஓய்வு காலங்களில் சகல வசதிகளுடனும் வாழவேண்டும் என்பது இலங்கை
அரசாங்கத்தின் கொள்கையில் ஒன்றாக காணப்படுகின்றது என தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்று சாடியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று மக்களை அதள
பாதாளத்தில் தள்ளிவிட்டு மக்கள் மீது அதிகளவான வரிச்சுமையினை உருவாக்கியவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
சுமக்கமுடியாத வரிச்சுமை
நாட்டில் மக்கள் சுமக்கமுடியாத வரிச்சுமையினை சுமந்துகொண்டிருக்கின்றார்கள். இதனால் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றார்கள்.
மிகவும் மோசமான பொருளாதா நிலையில் இருந்து இலங்கை மீண்டெழுந்து வருவதாக
கூறப்பட்டாலும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் படி இலங்கையின்
பொருளாதாரம் அபாயமான நிலையில்தான் இருக்கின்றது என சுருக்கமாக கடந்த வாரம்
தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இலங்கையில் பொருட்களுக்கான விலை ஏற்றம் காணப்பட்டாலும்
பொருட்களுக்கான தட்டுப்பாடு என்பது இல்லை.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமிங்க ஆட்சியில் இலங்கை மீண்டு வந்துள்ளது என்று அரசியல் வாதிகள்
சொல்லிவருகின்றார்கள்.
ஆனால் அது உண்மையா?
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கட்டம் கட்டமாக கடன் வழங்கி வருகின்றது. இதற்கான மீளாய்வுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
முன்னேற்றமான பாதை
இலங்கை முன்னேற்றமான
பாதையினை நோக்கி பயணித்தாலும் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ச்சியாக அபாயமான
கட்டத்தில்தான் இருக்கின்றது என்று சர்வதேச நாணய நிதியத்தினால் கடந்த வாரம்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் தாங்கிக்கொள்ளமுடியாத வரிச்சுமைகள்
சுமத்தப்பட்டுள்ளன. இது அரசியல்வாதிகளுக்கு உண்டா என்று பார்த்தால் அது இல்லை
என்றுதான் சொல்லவேண்டும்.
அரசியல்வாதிகள் இன்றும் சுகபோக வாழ்வினையே வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையில் ஒரு அரசியல்வாதியாக நாடாளுமன்றம் சென்றுவிட்டால் போதும் என்ற
முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மக்களின் வரிப்பணத்தில்தான்
அரசாங்கம் இயங்கி வருகின்றது. மக்களின் வரிப்பணத்தில்தான் சொகுசு
வாழ்கையினையும் பயணங்களையும் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த வரிப்பணத்தினை மக்கள் எவ்வாறு செலுத்துகின்றார்கள் என்றால் பாமர மக்கள்
கொள்ளவனவு செய்யும் ஒவ்வொரு பொருட்களிலும் அரசாங்கத்தின் வரி உள்ளது.
தற்போது இலங்கையில் தங்கள் பதவிக்காலங்களை நிறைவு செய்த முன்னாள்
ஜனாதிபதிகளுக்கு மக்களின் வரிப்பணம் அதிகளவில் செலவு செய்யப்பட்டு வருகின்றது.
இதனை அண்மையில் தென்னிலங்கையினை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்று தகவல் அறியும்
சட்டம்மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மிகக்சொகுசான இல்லங்களை வழங்குவதற்கு செலவு
செய்யப்படுகின்றது.
ஓய்வூதிய கொடுப்பனவு
அவர்களின் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்படுகின்றது. இவை
அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில்தான்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவிற்கு ஓய்வூதிய கொடுப்பனவாக 97ஆயிரத்தி 500 ரூபாவும், செயலாளருக்கான கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவவும், எரிபொருளுக்கான கொடுப்பனவாக 5 இலட்சம் ரூபா என ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு
வருகின்றது.
அடுத்தாக மகிந்த ராஜபக்சவுக்கு ஓய்வூதிய கொடுப்பனவாக 97 ஆயிரத்தி 500
ரூபாவும்,செயலாளருக்கான கொடுப்பனவு 50 ஆயிரம்ரூபா, எரிபொருளுக்கான 7
இலட்சத்திற்கும் அதிகமாக ஒவ்வொரு மாதமும் தவறாமல் கொடுக்கப்படுகின்றது.
அடுத்ததாக மைதிரிபால சிறிசேனாவுகும் ஓய்வூதிய கொடுப்பனவாக 97 ஆயிரத்தி
500 ரூபா செயலாருக்கான கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபா எரிபொருளுக்கான
கொடுப்பனவு 7 இலட்சம் ரூபா என மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
அடுத்ததாக கோட்டபாய ராஜபக்சவுக்கு அதிக
சொகுசு இல்லம், ஓய்வூதிய கொடுப்பனவாக 97 ஆயிரத்தி 500 ரூபா, செயலாளருக்கான
கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபா, எரிபொருளுக்கான கொடுப்பனவு 7 இலட்சம் ரூபா என
ஒவ்வொரு மாதமும் தவறாமல் வழங்கப்பட்டு வருகின்றது
இவ்வாறு மக்களின் பெருந்தொகை பணம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செலவு
செய்யப்படுகின்றது இது மக்களின் வரிப்பணம். இவை வீணடிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.