கண்டியில் உணவகம் ஒன்றில் தங்கியிருந்த நூற்றுக்கும் அதிகமான சீனப் பிரஜைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரமிட் நிதி மோசடி
பிரமிட் நிதி மோசடி செயற்பாட்டில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மடிக் கணனிகள் மற்றும் நூறு ஐ போன் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் குறித்த சீனப் பிரஜைகளை சோதனையிட்ட போது, கண்டியில் தங்கியிருப்பதற்கான நியாயமான காரணம் எதனையும் அவர்கள் முன்வைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனையடுத்து பிரமிட் நிதி மோசடி செயற்பாட்டில் அவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகள் நூறு பேரும் கைது செய்யப்பட்டு, கண்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.