நடிகை சுஷ்மிதா சென் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழிலும் பாப்புலர் நடிகை தான். அவர் தமிழில் ரட்சகன், முதல்வன் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது 49 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர் தனது குழந்தைகளாக வளர்ந்து வருகிறார்.
அவர் சில வருடங்களுக்கு முன்பு ரோமன் ஷால் என்ற நபர் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அவருக்கு சுஷ்மிதாவை விட 15 வயது குறைவாக இருந்தது. அதன் பின் 2021ல் அவர்கள் பிரேக்கப் செய்துவிட்டனர்.
அதன் பிறகு லலித் மோடி உடன் 2022ல் சுஷ்மிதா காதலில் இருப்பதாக அறிவிப்பு வந்தது. அவர்கள் ஜோடியாக வெளிநாட்டில் இருக்கும் ஸ்டில்களும் வைரல் ஆனது.
திருமணம் செய்துகொள்ள ஆசை
இந்நிலையில் தற்போது சுஷ்மிதா சென் ரசிகர்கள் உடன் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் பேசி இருக்கிறார். அப்போது அவரிடம் ஒரு நபர் திருமணம் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த அவர், ” எனக்கும் திருமணம் செய்துகொள்ள ஆசை தான். ஆனால் அதற்கு தகுதியான ஒரு நபர் வேண்டும். திருமணம் போகிற போக்கில் நடந்துவிடாது. அது இரண்டு இதயங்களின் பிணைப்பாக இருக்க வேண்டும்”.
“அந்த உணர்வு என் இதயத்தில் வரும்போது, நானும் திருமணம் செய்துகொள்வேன்” என சுஷ்மிதா கூறி இருக்கிறார்.