பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்றல்ல முன்பிருந்தே ஆதரவு
வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (19.08.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட
கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“40 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 39
பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் சுமுகமாக போகும் என்று நம்புகிறேன்.
பொது வேட்பாளர்
எதிர்ப்பரசியலில் ஈடுபடும் தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் போன்றோருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எனக்கும்
தெரிய வந்துள்ளது.
இதேவேளை, நான் பலருடன்
கலந்துரையாடி கிரகித்துக் கொண்டதற்கு அமைவாக, பொது வேட்பாளர் குறித்து மக்கள்
மத்தியில் சாதகமான அபிப்பிராயம் இருப்பதாக தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.