வடக்கு காசா பகுதியில் சாலையோரம் ஹமாஸ் செயல்பாட்டாளர்கள் வெடிகுண்டுகளை புதைத்து வைத்துக்கும் காட்சிகள்களை இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) வெளியிட்டுள்ளது.
ஜபாலியாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையில் இருந்து வெறும் 45 மீட்டர் தொலைவில் குறித்த குண்டுகள் வைக்கப்படுவதாக (IDF) தெரிவித்துள்ளது.
இராணுவ சுற்றிவளைப்பு
இந்தோனேசிய மருத்துவமனையில் கடந்த வாரம் இராணுவ சுற்றிவளைப்புக்களின் போது, மருத்துவ மையத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற பல ஹமாஸ் செயற்பாட்டாளர்களை துருப்புக்கள் கொன்றதாக IDF கூறுகிறது.
அத்தோடு, டஜன் கணக்கான ஹமாஸ் செயல்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களால் அப்பகுதியில் புதைக்கப்பட்ட பல வெடிபொருட்கள் செயலிழக்க செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
காணொளி
இந்த நிலையில், காசாவில் IDF ஆல் கண்டுபிடிக்கப்பட்ட ஹமாஸ் செயற்பாட்டாளர்களால் எடுக்கப்பட்ட காணொளியானது, அருகில் வெடிபொருட்களை புதைத்து வைப்பதைக் காட்டுகிறது.
🎥EXCLUSIVE FOOTAGE: Hamas terrorists planting explosives at a distance of approx. 45 meters from the Indonesian Hospital in northern Gaza.
Side Note: This footage was filmed by Hamas themselves. pic.twitter.com/gwZ849oDSX
— Israel Defense Forces (@IDF) December 30, 2024
ஹமாஸ் அமைப்பு காசா பகுதியில் உள்ள மக்கள் மற்றும் சிவில் நிறுவனங்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் வகையில் முறையில் பயன்படுத்தியதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு என்று IDF மேலும் குறிப்பிட்டுள்ளது.