விஜய் சேதுபதி
கடந்த 2013ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.
இதில் விஜய் சேதுபதி சுமார் மூஞ்சி குமார் என்ற ரோலில் நடிக்க மக்களால் கொண்டாடப்பட்டார். இப்படத்தில் அவர் பேசும் வசனங்களும், Body Language என ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

விஜய் சேதுபதி பல மேடைகளில் இந்த படத்தில் குமுதா ஹேப்பி அண்ணாச்சி வசனத்தை கூறி மக்களின் கைத்தட்டலை பெற்று வருகிறார். கோகுல் இப்படத்தை முழுக்க முழுக்க காமெடி ஜானரில் கலகலப்பான படமாக இயக்கியிருந்தார்.

விஜய் முதல்வராக வரட்டுமே, ஒருத்தர் தான் இருக்கணுமா?… பிரபலம் ஓபன் டாக்
அடுத்த பாகம்
தற்போது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இரண்டாம் பாகத்தினை இயக்குவதற்கு கோகுல் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதில் முக்கியமாக விஜய் சேதுபதி இல்லை என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் அவருக்கு பதிலாக சாண்டி மாஸ்டர் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டான்ஸ் மாஸ்டரான சாண்டி தற்போது நடிகராக கலக்கி வருகிறார்.


