இட்லி கடை
தனுஷ் இயக்கி நடித்து உருவான இட்லி கடை படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த 1ஆம் தேதி வெளியானது.
யதார்த்தமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் நித்யா மேனன் இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைந்து நடித்திருந்தார். இதற்குமுன் இருவரும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Dude படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?
மேலும், அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, கீதா கைலாசம், பார்த்திபன், இளவரசு மற்றும் சத்யராஜ் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல்
முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு பெற்று வரும் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இதுவரை இட்லி கடை படம் ரூ. 71.1 கோடி வசூல் செய்துள்ளது.


