ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவான குழுக்களுக்கிடையில் அடுத்த ஜனாதிபதி பதவிக்காலத்தின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமர் பதவி தொடர்பில் முரண்பாடுகள் தோன்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஐந்து மூத்த அமைச்சர்கள் பிரதமர் பதவிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் பதவிக்கு காத்திருக்கும் ஐவர்
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதி ஒருவரும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena), அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva) உள்ளிட்ட ஐவர் இதனை எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது குழுக்களுக்கிடையில் பல்வேறு சர்ச்சைக்குரிய சூழ்நிலைகள் உருவாகி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.