நடிகர் விஜய் தற்போது கட்சி தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறது. தற்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதற்கு பிறகு அவர் 2026 தேர்தலுக்கான பிரச்சார பணிகளில் ஈடுபட இருக்கிறார்.
அஸ்வத் மாரிமுத்து
சமீபத்தில் ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் வசூல் சாதனை படைத்து வரும் டிராகன் படத்தை இயக்கி இருப்பவர் அஸ்வத் மாரிமுத்து. அவர் தீவிரமாக விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் கில்லி படத்தை ரீமேக் செய்ய ஆசை என்றும் அவர் சமீபத்தில் கூறி இருந்தார்.
ஒருவேளை விஜய் மீண்டும் நடிக்க வந்தால் முதல் ஆளாக நான் ஸ்கிரிப்ட் உடன் அவர் வீட்டு வாசலில் நிற்பேன் எனவும் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்து இருக்கிறார்.