முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் மாவையின் வீடு தேடிச் சென்ற சிறீதரன்

 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் பின்னர் முன்னாள் எம்.பி சிறீதரன், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகிய மாவை சேனாதிராஜாவை சென்று சந்தித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழு இன்று தமது  வேட்பு மனுக்களை கையளித்துள்ளது.

மாவையை சந்தித்த சிறீதரன்

இதன்போது,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுமந்திரன் உள்ளிட்டவர்கள் சென்றிருந்தனர்.

இந்தநிலையில், வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் சிவஞானம் சிறீதரன்,  தமிழரசுக் கட்சியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்த மாவை சேனாதிராஜாவை சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யும் விடயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக, கட்சியின் தலைமைப் பதவி மற்றும் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் தாம் விலகுவதாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார்.

அத்துடன், கட்சியின் தலைமைப் பொறுப்பை சிறீதரன் ஏற்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் சுமந்திரனுக்கு சார்பான அணியினர் தன்னிச்சையாக செயற்படுவதாகவும், அவருக்கு ஆதரவானவர்களைத் தவிர ஏனையவர்களின் வேட்பாளர் விண்ணப்பங்களை நிராகரித்து தனக்கு சார்பானவர்களை உள்ளீர்த்துள்ளதாகவும் தெரிவித்து கட்சிக்குள் இருந்து பல முக்கியஸ்தர்கள் வெளியேறியிருந்தனர்.

வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் மாவையின் வீடு தேடிச் சென்ற சிறீதரன் | Ilangai Tamil Arasu Katchi Current Issue

இந்தநிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல்  இறுதி செய்யப்பட்டு இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வேட்பாளர்களுள் சிறீதரன் தவிர்ந்த ஏனைய அனைவரும் சுமந்திரன் அணியைச்  சார்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் மாவை சேனாதிராஜாவை சென்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை தமிழர் அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, 
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையைச் சுமந்து நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கட்சியின் தலைவர்
மாவை சேனாதிராஜா, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரனால், யாழ். மாவட்ட செயலகத்தில்
கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தந்தை செல்வா நினைவிடத்தில் அஞ்சலி
செலுத்திய பின்னர், கட்சியின் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெறச்
சென்ற சிறீதரனுக்கு வாழ்த்துரைத்தபோதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.

மேலதிக தகவல் – ராகேஷ்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.