முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம்

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. 

இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த கூட்டம் 

அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் | Ilankai Tamil Arasu Katchi Meeting In Colombo

இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது. 

அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்
தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3
தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் | Ilankai Tamil Arasu Katchi Meeting In Colombo

அதிலே
அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என
முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க
வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த
தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு
அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை.

அது காலம் கடந்து
கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு
விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.

முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள்
விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ்
தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில்
இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன்
சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும்.

தமிழ் தேசியக்
கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக
இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக்
கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள்
தீர்மானித்துள்ளோம்.

அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி
முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து
போட்டியிடும்.

திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால்
அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என
தீர்மானித்துள்ளோம்.

அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு – கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட
தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

விடுக்கப்பட்டுள்ள அழைப்பு 

எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால்
பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை
எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற
கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

அதற்கு வெளியே வேறு
கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து
பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை
உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு
எடுப்போம்.

கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் | Ilankai Tamil Arasu Katchi Meeting In Colombo

ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில்
இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று
புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும்
நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய
மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது
பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது.

அது நல்ல விடயம். இளைஞர்கள்,
ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை
உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அதற்கான
நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை
எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள்
எடுக்கபடும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன்
பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை.
நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி.

இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக
வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை
தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில்
நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள்
அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார். 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.