தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தான் ஒரு ஆளும் கட்சி உறுப்பினர் என்பதை மறந்து மக்களோடு மக்களாக நின்று அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அடிக்கடி சர்ச்சைகளுக்குள் சிக்கும் ஒரு நபராக காணப்படுகின்றார்.
இலங்கையின் மக்கள் தொகை, யாழ்ப்பாணத்தின் அமைவிடம், மற்றும் புரியாத வார்த்தைகளைக் கொண்டு(பேச்சுவழக்கு) அரசியல் உரை என்று நாடாளுமன்ற உறுப்பினரின் சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்கள் சமூக ஊடகங்களிலும் அதிக விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.
ஜனாதிபதியிடம் கோரிக்கை..
இந்தநிலையில், பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்த இளங்குமரன் தான் ஒரு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை மறந்து மக்களோடு மக்களாக நின்று அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக கைப்பற்றப்பட்ட தமிழர்களுடைய காணிகளை விடுவிக்க இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் இணைந்து வழிவகை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஆனால், அவரும் அரசாங்கத்தின் ஒரு உறுப்பினர் என்பதை மறந்துவிட்டார் போலும்..
மக்களது கோரிக்கைகளை ஏற்று சீர்செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவரே அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வழக்கத்தை மாற்றி, பாரம்பரிய கட்சிகளுக்கு விடைகொடுத்து ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கவையும், அடுத்து பொதுத் தேர்தலில் பல புது முகங்களையும் தேர்ந்தெடுத்தனர்.
எனினும், அநுர அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல மூத்த அரசியல்வாதிகள் புதிய அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். அனுபவமற்ற, அரசியல் அறிவற்ற ஒரு ஆட்சி என்று கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த விமர்சனங்களை உண்மை என்று காட்டுவது போலவே பல அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுள் அமைந்திருந்தன.
அதேபோலவே தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனது செயற்பாடுகளும் அமைந்துள்ளன.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு,
16 June, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>