பிரித்தானியாவில் குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் தமிழர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கைது நடவடிக்கையானது விசா இன்றி பணியாற்றுவோரை மையமாக கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டங்களுக்கு எதிராக பணியாற்றியமை
இதன்போது, சுற்றுலா விசாவில் சென்று அதற்கான கால எல்லை நிறைவடைந்தது பணியாற்றியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிலர் பிரித்தானிய அரசாங்க சட்டங்களுக்கு எதிரான முறையில் பணியாற்றியமை தொடர்பில் குடிவரவு அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளதுடன் சிலர் நாடு கடத்தலையும் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சமீப காலமாக பிரித்தானியாவில் குடியேற்ற சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், புகலிடம் கோருவோரை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.