மக்களின் காணிகளில் தையிட்டி விகாரை கட்டியது பிழை என்றாலும் அதை இடித்தழிப்பதும் பிழை என்றும் என பொகவந்தலாவ ராகுல தேரர் தெரிவித்தார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தையிட்டி பிரச்சினையை உடனடியாக முடிக்க வேண்டும், மக்களுடைய தனியார் காணிகளை அவர்களுக்கே திருப்பிக் கொடுக்க வேண்டும் அவர் தெரிவித்தார்.
எனினும், விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளருடன் பேச்சு நடத்தி அதற்குரிய தீர்வை பெற வேண்டுமே தவிர விகாரையை இடிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்…
https://www.youtube.com/embed/jzpSN0ZAN9A