முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒத்திவைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மீளாய்வு! வெளியானது காரணம்

இலங்கைக்கான (Sri Lanka) சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை நிதியுதவி தொடர்பான மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிபர் அலுவலகப் பிரதானியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கமைய, எதிர்வரும் செம்டெம்பர் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் குறித்த மீளாய்வு நடைபெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புக்கமைய குறித்த காலப்பகுதியில் அதிபர் தேர்தல் நடைபெற வேண்டுமென்ற காரணத்தால் நிதியத்தின் மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.    

அதிபர் வேட்பாளர்   

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வேட்பாளராக களமிறங்குவார் என சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மீளாய்வு! வெளியானது காரணம் | Imf 3Rd Tranche 336 Mn Dolalrs Review Postponed

எனினும், அவர் அரசியல் செய்வதற்காக தேர்தலில் களமிறங்கப்போவதில்லை எனவும் இலங்கையை கட்டியெழுப்புவதை மாத்திரம் நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு

அத்துடன், இலங்கையின் கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் ஊடாக கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

ஒத்திவைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மீளாய்வு! வெளியானது காரணம் | Imf 3Rd Tranche 336 Mn Dolalrs Review Postponed

தற்போது இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இது குறித்த இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்சியடையுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் மேம்படுவதை உலக நாடுகளுக்கு வெளிக்காட்டுவதன் ஊடாக அதிக முதலீடுகளை ஈர்க்க முடியுமெனவும் முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்க முடியுமெனவும் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.