Courtesy: H A Roshan
ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம், நேற்றையதினம்(14.02.2025) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
மூதூர் தொகுதி அமைப்பாளர்
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் இம்ரான் மகரூப் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.