முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இக்கட்டான நிலையில் நாட்டை பொறுப்பேற்காத சஜித்: இம்ரான் எம்.பி விளக்கம்

நாடு நிர்க்கதியாக இருந்தபோது சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அரசாங்கத்தை பொறுப்பேற்க
முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு மிகவும் அப்பட்டமானதாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்
மகரூப் (Imran Mahroof) தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் நேற்று (19.08.2024) இடம்பெற்ற தேர்தல்
பிரசாரமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“2019இல் அரசாங்கத்தை பொறுப்பேற்ற கோட்டாபய ராஜபக்சவின் பிழையான பொருளாதார
கொள்கையினால் நாடு அதல பாதாளத்திற்கு சென்றது. அத்தோடு, கோவிட் பெருந்தோற்றை
முறையான ஆலோசனைகளுக்கு அமைய நிர்வகிக்காது நோய்தொற்று வீரியமடைவதற்கும்
அவர்கள் காரணமாகினர்.

குழப்பமடைந்த ராஜபக்சக்கள்

இந்த விடயங்களில் சிறப்பாகச் செயற்படத் தவறிய கோட்டா
அரசாங்கம், முஸ்லிம்களையும் சிறுபான்மையினரையும் இலக்குவைத்து மிக மோசமான
இனவாத செயற்பாடுகளை அரங்கேற்றியது. இவர்களின் முறைகேடான அரசியல்
நடவடிக்கையினாலேயே நாடு படுபாதாளத்திற்கு சென்றது.

ராஜபக்சக்கள் நாட்டை பிழையாக வழிநடத்துவதை உணர்ந்த இளைஞர்களும்
பெரும்பான்மையின மக்களும் கிளர்ந்தெழுந்து அவர்களுக்கு எதிராக வீதிக்கு
இறங்கினர். இந்த போராட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி தான் ஆரம்பித்து
வைத்தது. நாங்கள் அன்று காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்ட இடத்தில் மேற்கொண்ட
போராட்டமே பின்னாட்களில் அரகலயவாக பரிணமித்தது.

இக்கட்டான நிலையில் நாட்டை பொறுப்பேற்காத சஜித்: இம்ரான் எம்.பி விளக்கம் | Imran Mp Explained Why Sajith Didn T Take The Govt

அதற்கு பலரும் பெயரை
போட்டுக்கொள்ள முற்பட்டனர்.

இவ்வாறு நாட்டுமக்கள் ராஜபக்சக்களை குற்றவாளிகளாக இணங்கண்டு அவர்களை
வீட்டுக்கு அனுப்ப முற்பட்டனர். இந்தநிலையில், குழப்பமடைந்த ராஜபக்சக்கள்
அரசாங்கத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை. தம்பியோடவும் முடியவில்லை.

இதனாலேயே தங்களை காப்பாற்றிக்கொள்ள முதலில் ரணில் விக்ரமசிங்கவை
பிரதமராக்கினர். பின்னர், கோட்டாவுக்கு இதற்கு மேலும் தாக்குபிடிக்க
முடியவில்லை என்பதனால் அவர் தப்பியோடினார்.

அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு கூறியபோது
நாம் கோட்டபாயவின் பதவி விலகல் உள்ளிட்ட சில விடயங்களை நிபந்தனைகளாக விதித்தோம்.

அரசியல் நாடகம்

ஆனால், உண்மையில் அவர்களே தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒரு காவலனை தெரிவுசெய்துகொண்டே
எமக்கு அழைப்பு விடுப்பது போன்று நாடகமாடினர். அந்த காவலன் ராஜபக்சக்களை
பாதுகாத்து நாட்டை விட்டு தப்பி செல்லவிருந்த ராஜபக்சக்களை தேர்தலில்
போட்டியிடும் அளவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இக்கட்டான நிலையில் நாட்டை பொறுப்பேற்காத சஜித்: இம்ரான் எம்.பி விளக்கம் | Imran Mp Explained Why Sajith Didn T Take The Govt

அந்த நேரத்தில் சஜித் பிரேமதாச
பிரதமராகி இருந்தால் இன்று ராஜபக்சக்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.

சஜித் பிரேமதாச நாட்டை இக்கட்டான நிலையில் பாரம் எடுக்கவில்லை என்பது ரணில்
விக்ரமசிங்கவும் ராஜபக்சக்களும் சேர்ந்து ஆடிய அரசியல் நாடகம். இது வெறும்
அரசியல் குற்றச்சாட்டுதான். ஆகவே, இதனை யாரும் நம்புவதாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.