Courtesy: H A Roshan
திருகோணமலை(Trincomalee) நகரில் அமைந்துள்ள சங்கமித்ர விகாரைக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் நேற்று(08.07.2024) மேற்கொண்டுள்ளார்.
விசேட கலந்துரையாடல்
இதன்போது, விகாரையில் நிலவும் குறைபாடுகள் சம்மந்தமாக விகாராதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது, முன்னாள் பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தலைவர் நௌபர் உட்பட விகாராதிபதி என பலர் கலந்து கொண்டுள்ளனர்.