நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக பாரிய திட்டங்கள் செயற்படுத்தப்படுவதுடன், இது தொடர்பாக ஏற்கனவே விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக நாம் செயற்பட்டு வருவதோடு, இந்த நாட்டில் சமூக சந்தை பொருளாதார அமைப்பை உருவாக்குவோம்.
அதேபோன்று இந்த சமூக சந்தைப் பொருளாதார அமைப்பின் கீழ், சகலரும் சமத்துவமாக வாழும் பொருளாதாரத்தை உருவாக்குவோம்.
பொருளாதாரக் கொள்கை
தற்காலிகமாக சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு உயர்ந்தால் மக்கள் வாழ முடியாது. தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை நவதாராளவாதக் கொள்கையாகும்.
ஆனால், நிவாரணங்களை வழங்கும் பொருளாதார முறைக்குப் பதிலாக, மக்கள் சொந்தக் காலில் நிற்கக்கூடிய பொருளாதாரத்தை நாங்கள் ஏற்படுத்துவோம்.
கைத்தொழில், தொழிநுட்ப உற்பத்தி மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்ளுர் கைத்தொழில்களை மேம்படுத்துவதுடன் எதிர்காலத்தில் இந்நாட்டில் பாரிய பொருளாதார மாற்றமும் உருவாக்கப்படும்“ என தெரிவித்துள்ளார்.