ஜம்மு-காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
யங்கரவாதத் தாக்குதல்
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பயங்கரவாதத் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இராணுவ தரப்பில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிரமான பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகின்றது.

எனவே, அமெரிக்கா்கள் ஜம்மு- காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
அதேபோல மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிலோமீட்டருக்கு அப்பால் மட்டுமே அமெரிக்கா்கள் பயணிக்க வேண்டும்.
ஏனெனில் அங்கும் மோதலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

