முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவுடன் கைகோர்க்கும் முக்கிய நாடு: பாகிஸ்தானுக்கு காத்திருக்கும் பேரிடி

இந்தியாவின் (India) பாகிஸ்தான் (Pakistan) மீதான ஒபரேசன் சிந்தூருக்கு பல நாடுகள் வருத்தங்களை தெரிவித்திருந்தாலும், அதில் சில நாடுகள் அதனை மறைமுகமாக ஆதரித்துள்ளதாகவே சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒபரேஷன் சிந்தூர் தொடர்பில் அமெரிக்கா, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரித்தானிய பிரதிநிதிகளிடம் இந்தியா விளக்கமிளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது, உளவு அமைப்புகள் வழங்கிய தகவல்களின் படி, பயங்கரவாத தளங்களை இலக்கு வைத்து மாத்திரமே குறித்த தாக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஆதரவு பேச்சு 

எவ்வாறாயினும், பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு இந்தியாவிற்கு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் வெளிப்படையாகவே ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவுடன் கைகோர்க்கும் முக்கிய நாடு: பாகிஸ்தானுக்கு காத்திருக்கும் பேரிடி | India S Attack On Pakistan Supported By Israel

இந்தியாவின் ஒபரேசன் சிந்தூருக்கு பல நாடுகளும் கவலை வெளியிட்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் மாத்திரம் இந்தியாவின் தற்காப்பு உரிமையை ஆதரிப்பதாக கூறியுள்ளது.

அத்தோடு, ஒபரேசன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகளின் மூலம், பயங்கரவாதிகள் அப்பாவிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களிலிருந்து ஒளிந்து கொள்ள இடமில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் வழங்கிய ஜெட் விமானம்

இவ்வாறானதொரு பின்னணியில், இந்தியாவிற்கு அடுத்தபடியாக பாகிஸ்தானை அதிகமாக வெறுக்கும் நாடாக இஸ்ரேல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவுடன் கைகோர்க்கும் முக்கிய நாடு: பாகிஸ்தானுக்கு காத்திருக்கும் பேரிடி | India S Attack On Pakistan Supported By Israel

இதேவேளை, பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களின் போது கூட, இஸ்ரேல் வழங்கிய ரஃபேல் ஜெட் விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், ஒருவேளை இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்களை தொடர்ந்தால், இந்தியாவுடன் பிரதானமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிச்சயம் கைகோர்க்கும் என சில சர்வதேச போரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.