Courtesy: நயன்
தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை
துறைமுகத்திலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி
வைக்கப்பட்டிருந்த 150 கிலோ
கஞ்சா பொதிகளை தமிழ்நாடு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்திய மதிப்பில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 150 கிலோ
கஞ்சா பொதிகளுடன், இருவர் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சமீப காலமாக
தனுஷ்கோடி கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து
இலங்கைக்கு,கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, சமையல் மஞ்சள், மெத்தாம்பேட்டமைன்
உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு
இந்நிலையில் நேற்று (13) இரவு தொண்டி அடுத்த முள்ளிமுனை கடற்கரையிலிருந்து
படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முள்ளிமுனை முகதுவார கடற்கரை பகுதியில் தேவிப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து இருவர் தப்பி சென்ற நிலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா இருந்தமை
தெரியவந்துள்ளது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட முள்ளிமுனை
பகுதியை சேர்ந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

