புதிய இணைப்பு
இந்திய விமானப்படையின் (IAF) இரண்டு MI-17V5 உலங்குவானூர்திகள் இன்று (29.11.2025) மாலை இலங்கைக்கு வந்து தொடர்ந்தும் தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
இந்த விமானம் 22 பேருடன் நிவாரணப் பணிகளுக்கான அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களையும் கொண்டு வந்துள்ளது.
இந்த இரண்டு உலங்குவானூர்திகளையும் விங் கமாண்டர் நாகேஷ் குமார் மற்றும் விங் கமாண்டர் முகுல் மகாஜன் ஆகியோர் விமானிகளாக செயற்பட்டுள்ளது.

மேலும், இன்று மதியம் திவுலப்பிட்டி மற்றும் கம்பஹா பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டன.
இதன்போது வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த பன்னல பிரதேசத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கையை இந்திய விமானப்படை விமானிகள்,இந்திய டைவர்ஸ் மற்றும் இலங்கை விமானப்படை விமானிகளும் இணைந்து மேற்கொண்டனர்.
முதலாம் இணைப்பு
நாட்டில் டித்வா புயல் காரணமாக கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை சந்தித்து வருகின்ற நிலையில் தொடர்ந்தும் நிவாரண உதவிகளை அனுப்பும் பணிகளை இந்திய வெளியுறவுத்துறை ஒருங்கிணைத்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்திவ் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் இந்தியா விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை சேர்ந்த வீரர்களின் குழு கை கோர்த்துள்ளதாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு ஆதரவு
மேலும் அவருடைய பதிவில், இலங்கையினை ஆதரித்து இந்தியாவால் ஆரம்பிக்கப்பட்ட “ஒபரேஷன் சாகர் பந்து”வின் ஒரு பகுதியாக, விமானம் தாங்கி கப்பல் INS விக்ராந்திலிருந்து இரண்டு சேத்தக் வகை ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படை வீரர்களுடன் இணைந்து முதல்கட்டமாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக புறப்பட்டன.
#OperationSagarBandhu
Two Chetak helicopters from @IN_R11Vikrant took off for Search and Rescue Operations with 🇱🇰 @airforcelk personnel onboard.#IndiaFirstResponder pic.twitter.com/qPhfQmQzoD
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 29, 2025
இதை தவிர இரண்டு இந்திய விமானப்படை விமானங்கள், INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி கப்பல்கள் மூலம் இதுவரை 27 டொன் அளவிலான உதவி பொருட்களையும் இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டன.” என குறிப்பிட்டுள்ளார்.

