முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய பிரதமர் இலங்கை வருகிறார்

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டுக்குள் இலங்கைக்கு வருகை தருவார் என்று கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகரகத்தை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று  இன்று தெரிவித்துள்ளது.

எனினும் அதற்கான திகதிகள் இன்னும் இரண்டு  தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை.

 பிரதமரின் பயணம்

இந்தநிலையில் பிரதமரின் பயணத்திற்கான ஒரு சாதகமான காலத்தை தாம் பரிசீலித்து வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்திய பிரதமர் இலங்கை வருகிறார் | Indian Pm Modi To Visit Sri Lanka In 2025

இந்த அழைப்புக்கு இணங்கவே பிரதமர் மோடியின் விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக பிரதமர் மோடி 2015 மற்றும் 2017க்கு இடையில் இரண்டு முறை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்திய பிரதமர் இலங்கை வருகிறார் | Indian Pm Modi To Visit Sri Lanka In 2025

இதேவேளை இலங்கை ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது முன்மொழியப்பட்ட இருதரப்பு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டதாக இன்று செய்தியாளர்களிடம் சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கலந்துரையாடலின் போது எந்த விடயங்களும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்
எனவே இந்த விடயத்தில் காலக்கெடுவை விதிப்பது நடைமுறைக்கு மாறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்