முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய இழுவைப்படகு அடாவடி : யாழ். சுழிபுரம் கடற்றொழிலாளர்களின் வலைகள் நாசம்

இந்திய (India) இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை (Sri Lanka) கடற்பரப்பினுள் உள்நுழைந்து மீன்பிடி
நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் – சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி கடற்றொழிலாளர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு (08) குறித்த கடற்றொழிலாளர்கள் திருவடிநிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது
வலைகளை அறுத்துள்ளன.

இதனால் அவரிடம் இருந்து 32 வலைகளில் 26 வலைகள்
அறுக்கப்பட்ட நிலையில் ஆறு வலைகளே மீதமாகின எஞ்சிய வலைகளும் சேதமடைந்த
நிலையிலேயே காணப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்

இது குறித்து பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், நேற்றிரவு (08) பத்து மணியளவில் அசத்துமீறி கடற்றொழில் ஈடுபட்ட ரோலர்கள் எமது வலையை
மட்டுமல்லாமல் வேறு சங்கங்களின் வலைகளையும் அறுத்துள்ளன.

இப்பொழுது கடற்றொழில் பருவகாலம், இந்திய இழுவை படகுகளின் இவ்வாறான செயற்பாடுகளால் நாங்கள் உழைக்க
முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய இழுவைப்படகு அடாவடி : யாழ். சுழிபுரம் கடற்றொழிலாளர்களின் வலைகள் நாசம் | Indian Trawlers Illegally Entering Sri Lanka

ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன் பெற்றே இந்த வலை முதல்களை உருவாக்கி கடலில்
தொழில் செய்தேன்.

எனது வலைகளை இந்தியன் இழுவைப் படகு அறுத்துச் சென்றதால்
வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன், வங்கி கடனை செலுத்த என்ன செய்வேன் என்று
தெரியாமல் தவிக்கின்றேன்.

புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி பல நல்ல வேலைத்திட்டங்களை செய்கின்றார் அதுபோல இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினையையும் தீர்த்து வையுங்கள்.

புதிதாக வந்த அமைச்சர் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து இந்திய இழுவைப் படகுகளை
கட்டுப்படுத்த வேண்டும் அரசாங்கம் எனக்கு இழப்பீடாடினை வழங்கி, நான் மீண்டும்
தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.