முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடொன்றில் சட்டவிரோத தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : 15 பேர் பலி

இந்தோனேசியாவின் (Indonesia) சுமாத்ரா (Sumatra) தீவில் சட்டவிரோதமாக செயற்பட்ட தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு சுமாத்ரா மாகாணத்தில் உள்ள சோலோக் மாவட்டத்தில் நேற்று (28.09.2024) கிராம தொழிலாளர்கள் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவு

மழை காரணமாக குறித்த சுரங்கம் சரிந்து விழுந்துள்ளதால் சுமார் 25 பேர் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாகவும், காயங்களுக்கு உள்ளான 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் பேரிடர் தணிப்பு முகமை அலுவலக தலைவர் குறிப்பிட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிநாடொன்றில் சட்டவிரோத தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : 15 பேர் பலி | Indonesia 15 Killed In Landslide

இதேவேளை இந்தோனேசியாவில் கடந்த ஜூலை மாதம் சுலவேசி தீவில் உள்ள கொரண்டலோ மாகாணத்தில் இறுதியாக சுரங்க விபத்து நிகழ்ந்தது. அங்குள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 23 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வடக்கு சுமாத்ராவின் மண்டைலிங் நடால் மாவட்டத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பெண்கள் உயிரிழந்தனர்.

அதற்கு முன்னதாக 2019 பெப்ரவரியில், வடக்கு சுலவேசி மாகாணத்தில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில், மண் சரிந்ததில் 40க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/gcWtggKjLKU

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்