இந்திரஜா
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் களமிறங்கி தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் கவனம் பெற்றவர் நடிகர் ரோபோ ஷங்கர்.
வெள்ளித்திரையில் நடிக்க களமிறங்கியவர் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் முன்னணி காமெடி நடிகராக மாஸ் காட்டி வருகிறார். இடையில் உடல் நலக் குறைவால் கேமரா பக்கம் வராமல் இருந்தவர் மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார்.
இவரது மகள் இந்திரஜாவும் பிகில் படம் மூலம் களமிறங்கி சில படங்கள் நடித்தார். சில வருடம் முன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.


ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தனுஷின் குபேரா OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
இந்திரஜா மற்றும் கார்த்திக் அண்மையில் தங்களது யூடியூப் பக்கத்தில், தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த குழந்தைகளின் சிந்தனைத் திறன் வெகுவாக தற்போது குறைந்துள்ளது என்று வீடியோவில் தெரிவித்திருந்தார். அது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
அதிரடி வீடியோ
இந்நிலையில் இந்திரஜா குருபூர்ணிமாவை முன்னிட்டு “நான் செய்த பிழைகளை எல்லாம் பொறுப்பாய் அம்மா” என்ற பாடலை பாடியிருக்கிறார். தற்போது, சர்ச்சைக்கு நடுவில் இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram

