முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லட்சக்கணக்கில் பலியான ரஷ்ய வீரர்கள்: அதிர்ச்சிகர போர் அறிக்கை

2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, உக்ரைனில் (Ukraine) சுமார் 250,000 ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, மொத்தம் 950,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையொன்று வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, மொத்த ரஷ்ய (Russia) உயிரிழப்புகள் ஒரு மில்லியனைத் தாண்டக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இராணுவ முன்னேற்றம்

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாக்குதல்களை அதிகரித்த போதிலும், ரஷ்யாவின் இராணுவ முன்னேற்றம் மந்தமாகவே உள்ளது.

லட்சக்கணக்கில் பலியான ரஷ்ய வீரர்கள்: அதிர்ச்சிகர போர் அறிக்கை | Injured Military In Russia Ukraine War

இதுமட்டுமின்றி, உயிரிழப்புடன் போர் ஆயுதங்களின் இழப்பும் பொருந்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.

டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் என ஆபத்தான விகிதத்தில் ரஷ்யா இழந்துள்ளதுடன் சில சமயங்களில் 5:1 என்ற விகிதத்தில் பதிவான இழப்பு உக்ரைனுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி

சீனா, ஈரான் மற்றும் வட கொரியாவிலிருந்து ஆயுதங்களைப் பெற்று, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்த போதிலும், ரஷ்யா சிறிய பிராந்திய ஆதாயங்களுக்காக ஆயிரக்கணக்கான வாகனங்களையும் வீரர்களையும் தொடர்ந்து இழந்துள்ளது.

லட்சக்கணக்கில் பலியான ரஷ்ய வீரர்கள்: அதிர்ச்சிகர போர் அறிக்கை | Injured Military In Russia Ukraine War

கார்கிவ் பகுதியில், ரஷ்ய துருப்புக்கள் ஒரு நாளைக்கு வெறும் 50 மீற்றர் வேகத்தில் முன்னேறியுள்ளன.

டொனெட்ஸ்கின் அவ்டிவ்கா-போக்ரோவ்ஸ்க் செக்டரில், இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 135 மீற்றர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரைன் தரப்பிலும் பெரும் இழப்பை எதிர்கொள்ள நேர்ந்ததுடன் 60,000 முதல் 100,000 வரை உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலுவான தற்காப்பு

மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 400,000 தொடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், உக்ரைனியப் படைகள் வலுவான தற்காப்பு முனைப்பைப் பராமரித்து வருவதுடன் அகழிகளை வலுப்படுத்துகின்றன.

லட்சக்கணக்கில் பலியான ரஷ்ய வீரர்கள்: அதிர்ச்சிகர போர் அறிக்கை | Injured Military In Russia Ukraine War

அத்தோடு, கண்ணிவெடிகளை அமைக்கின்றன மற்றும் ட்ரோன் போரை திறம்பட பயன்படுத்துகின்றன.

மேலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மிக நீண்ட கால போர் யுத்தியை பயன்படுத்தி வருவதகாவும், அமெரிக்காவின் ஆதரவு ஒருகட்டத்தில் நிறுத்தப்படும் வரையில் பொறுமையுடன் காத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.