‘ஒட்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விட்டடினது..’ என்றுகூறுவார்களே.. சாணக்கியன் கூறியதாக சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் ஒரு ஒலிப்பதிவைப் பார்க்கின்றபோது இந்தப் பழமொழிதான் ஞபகத்துக்கு வருகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அரியநேந்திரனை தமிழரசுக் கட்சியைவிட்டு நீக்கிவிட்டதாகவும், அவரை தமிழரசுக்கட்சித் தேர்தல் மேடைகளில் ஏற்றக்கூடாது என்ற தொணிப்படவும் சாணக்கியனின் அந்தக் குரல்பதிவு அமைந்திருந்தது.
சாணக்கியணின் இந்தச் செயலை, தமிழரசுக் கட்சியிலுள்ள ‘சுமந்திரன் அணி’ மேற்கொண்டுவருவதாகக் குற்றம்சுமத்தப்படுகின்ற ‘தேசிய நீக்க அரசியலின்’ ஒரு வெளிப்பாடாகவே விமர்சித்துவருகின்றார்கள் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்.
‘தமிழ் தேசியம்’ என்கின்ற விடயத்தில் எந்தவிதத்திலும் சோரைபோகாத ஒரு தலைவர்தான் அரியநேந்திரன்.
தமிழ் தேசியப் பரப்பிலும், தமிழரசுக் கட்சியிலும் ஒரு நீண்ட வராற்றைக்கொண்டுள்ள அரியநேந்திரன்- தேசியம் சார்ந்த பல சாதனைகளுக்குச் சொந்தக்காரன்.
நீண்டகாலம் ஊடகவியலாளராக பணியாற்றிய அரியனேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பெயரில் தமிழ்க் கட்சிகள் பலவற்றையும் ஒன்றினைக்கும் பணியில் முக்கியமான ஒரு இணைப்பாளராகச் செயற்பட்டவர்.
புலிகள்-கருணா பிளவு காலத்தில், கருணாவின் பிரதேசவாதத்தை கருணாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்தே எதிர்த்துப் போராடியவர்.
மட்டக்களப்பில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் கருணாவுக்காக நிலைப்பாடு எடுத்த நேரத்தில், மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுடன் இணைந்து கருணாவுக்கு எதிராக- வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் தேசியத்துக்குச் சார்பாக – தனது உயிரையும் துச்சமென நினைத்துச் செயற்பட்ட ஒருவர்தான் அரியனேந்திரன்.
தமிழ் தேசியத்திற்காக அரியனேந்திரன் சாவின் விளிம்புவரை சென்று திருப்பிய சந்தர்ப்பங்கள் என்று ஏராளம் இருக்கின்றன.
கருணா குழு, பிள்ளையான் குழு, ஜிகாத் குழு, ரிப்போலி பட்டாலியன், வெள்ளை வான் கடத்தல்கள் என்று மட்டக்களப்பில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த காலப்பகுதியில் தமிழ் தேசியத்தின் பக்கம் துணிந்து நின்று சாதனைகள் புரிந்த ஒருவர்தான் இந்த அரியனேந்திரன்.
மிக இக்கட்டாக காலகட்டத்தில் இரண்டு தடவைகள் தமிழரசுக் கட்சி சார்பாக நாடாளுமன்றம் சென்றவர் அரியனேந்திரன்.
‘அது ஒரு தற்கொலை முயற்றி’ என்று நன்கு தெரிந்தும் கூட கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் தேசியச் சங்கை ஊதியபடி தமிழ் மக்களை அரசியல்மயப்படுத்துவதற்காகத் தன்னை அர்ப்பணித்தவர்தான் அரியனேந்திரன்.
ஆனால் சாணக்கியன் அப்படி அல்ல.
கருணா குழு, பிள்ளையான் குழு, ஜிகாத் குழு, ரிப்போலி பட்டாலியன், வெள்ளை வான் கடத்தல்கள் என்று மட்டக்களப்பில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த காலப்பகுதியில்
தமிழ் மக்களுக்கு இத்தனை அனியாயங்களையும் புரிந்த தரப்புக்களுடன் கைகோர்த்து அரசியல்செய்த ஒருவர்தான் சாணக்கியன்.
தமிழ் தேசியத்தின் பெயரில் தமிழ் மக்கள் திரண்டெழுந்தபோது, வடக்கு கிழக்கில் 1000 பௌத்தவிகாரைகள் அமைப்பேன் என்று சபதமெடுத்த சஜித் பிரேமதாசவின் பின்னால் கிழக்குத் தமிழர்களைத் திரட்டிய ஒருவர்தான் இந்தச் சாணக்கியன்.
கிழக்கில் நடக்கின்ற அநீதிகளைத் தட்டிக்கேட்டு, வடக்கு கிழக்கு இணைப்பிற்கு வலுச்சேர்க்கும்படியாக மட்டக்களப்புக்கு வந்த வேலன் சுவாமிகளை கேவலப்படுத்தி கிழக்கைவிட்ட வெளியேற்றியவர்தான் இந்தச் சாணக்கியன்.
இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட சாணக்கியன்- அரியநேந்திரன் போன்ற ஒரு தமிழ் தேசியச் சாதனையாளனை தமிழரசுக் கட்சியை விட்டு நீக்கப்பட்டவராகக் கூறுவது என்கின்ற அவலமானது, அந்தத் தமிழரசுக் கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகத் தெரிகின்றது என்று கூறுகின்றார்கள் கிழக்கு வாழ் தமிழ் மக்கள்.
சுமோ மாதிரியே சுமோவின் சீடர்களும் பேச ஆரம்பித்திருப்பது கவலை அளிக்கின்றது என்று கோபம் வெளியிடுகின்றார்கள் தமிழ் மக்கள்.
https://www.youtube.com/embed/QWNLljqpHo0