Courtesy: H A Roshan
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகதேர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா ரேன்ஞர்ஸ் பொது விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ள நகர சபைக்கு சொந்தமான கட்டிடமொன்றில் குறித்த நேர்முகத்தேர்வு நடைபெற்றுள்ளது.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவருமான இம்ரான் மஹ்ரூப் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள்
மேலும், தேர்தலில் போட்டியிடவுள்ள திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பல வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.