லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மூன்று முன்னாள் முதலமைச்சர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சப்ரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத், மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜெயரத்ன ஆகியோருக்கு எதிராகவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கள்
குறித்த நபர்கள் மீது சட்டவிரோத சொத்து குவித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை கருத்தில் கொண்டு மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் 2016 முதல் 2017 வரை மாதத்திற்கு 4,700 லீற்றர் எரிபொருளை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளமை அண்மையில் அம்பலமாகியிருந்தது.
இந்த விடயம் கோபா குழுவில் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

