முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச சேவை தொடர்பான முறைப்பாடுகளுக்கு விசாரணை அலகு : கிடைத்தது அனுமதி

அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வகைகூறுதலை உறுதி செய்வதற்காக அமைச்சுக்களில் விசாரணை அலகுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தற்போது அரச சேவை தொடர்பில் நாளாந்தம் அதிகளவு முறைப்பாடுகள் பெயர் குறிப்பிட்டும், அநாமதேயமாகவும் ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கிடைத்து வருகின்றது.

பொது மக்களின் முறைப்பாடுகள்

அரசு மீது மக்கள் வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாக அரச சேவையில் எதிர்பார்க்கப்படும் சாதகமான மாற்றங்களை மேற்கொள்வதற்காக அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற வகையிலும் மற்றும் விஞ்ஞான ரீதியாகவும் விடயங்களை விசாரணை செய்ய வேண்டியுள்ளது.

அரச சேவை தொடர்பான முறைப்பாடுகளுக்கு விசாரணை அலகு : கிடைத்தது அனுமதி | Investigation Unit For Complaints Of Govt Service

அதற்கமைய, முன்னைய அரசுகளின் கீழ் அரச நிறுவனங்கள் செயற்பட்டுள்ள விதம் தொடர்பிலும், தற்போது அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் முன்வைக்கப்படும் பொது மக்களின் முறைப்பாடுகள், விளக்கமளித்தல் மற்றும் பல்வேறு மூலங்களிலிருந்து தெரியவரும் தகவல்கள் தொடர்பான விடயங்களை விசாரணை செய்வதற்காக குறித்த அலகுகள் நிறுவப்படவுள்ளன.

எனவே அமைச்சு மட்டத்தில் நாடு தழுவிய சேவையில் முதலாம் தர அலுவலர் அல்லது புலனாய்வுச் செயன்முறை தொடர்பான அனுபவமுள்ள அரச சேவையின் முதலாம் தர நிறைவேற்று அதிகாரியின் தலைமையில் விசாரணை அலகை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.