முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவுக்குள் புகுந்த ஈரானியர்களை தேடி அதிரடி: அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி

ஈரானின் உயர் அரசு அதிகாரிகள் உட்பட அவர்களுடன் தொடர்புடைய பலர் எவ்வாறு கனடாவிற்குள் நுழைந்தனர் என்பது குறித்து கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஈரான் பிரஜைகள் சிலர் கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு முதல், ஈரான் அரசாங்கம் ஒரு “தீவிரவாதத்தில் ஈடுபடும் மற்றும் மனித உரிமை மீறல்களில் தொடர்புடைய அரசு” என கனடா அரசு அறிவித்திருந்தது.

131 விசாக்களை ரத்து

அதன் காரணமாக, ஈரான் அரசின் சிறப்பான பதவியில் உள்ள யாரும் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட கூடாது என்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.

கனடாவுக்குள் புகுந்த ஈரானியர்களை தேடி அதிரடி: அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி | Investigations Begins Iranians Enter Canada

இதன்படி, கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) இதுவரை 131 விசாக்களை ரத்து செய்துள்ளது.

அத்துடன், CBSA மொத்தம் 115 விசாரணைகளை தொடங்கியுள்ளது. இதில் 49 விசாரணைகள் முடிவடைந்துள்ளன, மீகுதி 66 விசாரணைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

இதுவரை, 20 பேர் ஈரானின் உயர் அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 19 பேர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் அல்லது பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

நாடுகடத்தல் உத்தரவு

இந்த விசாரணைகளில், 3 பேருக்கு நாட்டை விலக்கும் உத்தரவு (Removal Order) பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதில் ஒருவர் ஏற்கனவே கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.

கனடாவுக்குள் புகுந்த ஈரானியர்களை தேடி அதிரடி: அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி | Investigations Begins Iranians Enter Canada

2024ம் ஆண்டில், ஈரானின் ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) என்ற அமைப்பு, கனடாவால் தீவிரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டது, இதனால், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் மீதும் விசாரணைகள் தொடங்கியுள்ளன.

தற்போது கண்காணிக்கப்படும் சில பேர், ஈரான் அரசாங்கத்திலும், உளவுத்துறையிலும், பாதுகாப்பு அமைப்புகளிலும் பணியாற்றியவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

CBSA கூற்றுப்படி, ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது, அவர்களால் மேல் முறையீடு செய்யலாம், பாதுகாப்பு மதிப்பீடு கோரலாம்.
அதனால் தான் பலர் இன்னும் கனடாவில் உள்ளனர், அவர்களின் வழக்குகள் இன்னும் தீரவில்லை.

அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

தற்போது வரை, வழக்குகள் பலருக்கும் நிலுவையில் உள்ளன. ஆனால் ஒரே ஒரு நபரே இதுவரை உடனடியாக நாடுகடத்தப்பட்டுள்ளார்.   

இதேவேளை, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், கனடாவினுள் ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) உறுப்பினர்கள் இருப்பதாக செய்திகள் வெளியாவது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

கனடாவுக்குள் புகுந்த ஈரானியர்களை தேடி அதிரடி: அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி | Investigations Begins Iranians Enter Canada

இந்த நிலையில், கனடாவும் அமெரிக்காவும் Five Eyes Intelligence Alliance எனும் உளவுத்துறை கூட்டணியில் உள்ளன. எனவே, ஒரு நாட்டின் மண்ணில் உள்ள எதிரி, மற்றொரு நாட்டுக்கும் பாதுகாப்பு ரீதியாக அச்சுறுத்தலாக அமையலாம்.

IRGC கனடா, அமெரிக்கா இரு நாடுகளாலும் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது (2024), எனவே, அந்த அமைப்பினரின் ஆட்கள் கனடாவிலுள்ள சூழ்நிலை, அமெரிக்க பாதுகாப்புத் தரவுகளையும் உளவுத்தகவல்களையும் ஆபத்துக்குள்ளாக்கும் வாய்ப்பு உள்ளது என சர்வதேச வட்டாரங்கள் தெரிக்கின்றன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.