ஈரானிய பழிவாங்கும் தாக்குதல்கள் என அழைக்கப்படும் “ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 3” தேவைப்படும் வரை தொடரும் என்று மூத்த ஈரானிய இராணுவ அதிகாரி ஜெனரல் அஹ்மத் வாஹிடி
சூளுரைத்துள்ளார்.
இதேவேளை ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல்களை அடுத்து பதிலடி நடவடிக்கையில் ஈரானும் இறங்கியுள்ளது.
இஸ்ரேலின் இலக்குகளை தாக்கிய ஏவுகணைகள்
இஸ்ரேலுக்குள் உள்ள இலக்குகள் மீது இரண்டாவது சுற்றுத் தாக்குதல்கள் தொடங்கியுள்ளதாக ஈரானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரானிய ஏவுகணைகள் மழை போல பொழிந்ததால் பெரும் வெடிப்புகள் ஏற்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் தெஹ்ரானில் இருந்தும், மேற்கு ஈரானின் கெர்மன்ஷாவிலிருந்தும் இஸ்ரேலின் ஆழமான இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை
இதற்கிடையே, ஈரானிய தாக்குதலை எதிர்பார்தது எதிர்பார்த்து, இஸ்ரேலிய இராணுவ விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

இதேவேளை இஸ்ரேலின் இரண்டு எப்35 போர்விமானங்களை சுட்ட வீழ்த்தியதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

