ஈரான் (iran)இராணுவம் நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட பயிற்சிகளின் ஒரு பகுதியாக நாட்டின் மையத்தில் உள்ள Natanz அணுசக்தி செறிவூட்டல் ஆலைக்கு அருகில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது என்று அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்தன.
காதம் அல்-அன்பியா வான் பாதுகாப்பு தளத்தின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் காதர் ரஹிம்சாதேவின் உத்தரவின் கீழ், நடான்ஸ் அணுமின் நிலையத்தின் வான் பாதுகாப்பு மண்டலத்தில், எக்டேதார் (அதிகாரம்) 1403 என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இராணுவப் பயிற்சியின் முதல் கட்டம் தொடங்கியது.
முதற்கட்ட பயிற்சி
செவ்வாயன்று(07) “எக்டேதார் 1403” பயிற்சியின் முதல் கட்டத்தின் தொடக்கத்தை அறிவித்த பிரிகேடியர் ஜெனரல் ரஹிம்சாதே, இந்த இராணுவப் பயிற்சியின் போது, இஸ்லாமிய புரட்சிக் காவலர்களின் (IRGC) வான்வெளிப் படையின் வான் பாதுகாப்புப் பிரிவுகள் விரிவான பாதுகாப்பை வழங்குகின்றன என்றார்.
திங்களன்று, புரட்சி காவலர் படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, மார்ச் நடுப்பகுதி வரை ஈரானின் பிற பகுதிகளையும் உள்ளடக்கும் வகையிலான பயிற்சிகள், “புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு” பதிலளிக்கும் வகையில், விவரிக்கப்படாமல் நடத்தப்படுகின்றன என்றார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
கட்நத ஒக்டோபர் மாதம் ஈரானிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேலிய(israel) தாக்குதல்கள் – தெஹ்ரானால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது.ஈரானின் பெரும்பாலான வான் பாதுகாப்பு அமைப்புகள் தகர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, இதில் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட நான்கு S-300 வான் பாதுகாப்பு அமைப்புகள் அடங்கும்.