கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் செயற்பாட்டின் பிரதான பங்குதாரர்களில் ஒருவரான இலங்கை துறைமுக அதிகாரசபை, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை கொள்கலன் செயற்பாட்டுத் திறனை அடைந்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் துறைமுக அதிகாரசபையால் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 41,032 ஆக இருந்ததுடன், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அது 6 லட்சத்து 52,766 ஆக அதிகரித்துள்ளது. இது சதவீத அடிப்படையில் 48 சதவீத அதிகரிப்பாகும்.
மேலும், இலங்கை துறைமுக அதிகாரசபை இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் 5 லட்சத்து 82,403 கொள்கலன்களை கையாண்டு மீள அனுப்பியுள்ளது.
முகநூல் விளம்பரத்தினை நம்பி வேலைக்கு சென்ற இளம்யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி
கொழும்பு துறைமுகம்
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 49.8.1 வீத வளர்ச்சியாகும் என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் முதல் 03 மாதங்களில் கொழும்பு துறைமுகம் முழுவதும் 17 லட்சத்து 29,314 கொள்கலன்களைக் கையாண்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இது 24 சதவீத வளர்ச்சியாகும். செங்கடலைச் சூழவுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் அபாயம் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் இயக்கத் திறன் குறுகிய கால அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடன் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
கப்பல் வலையமைப்பு
அதற்கமைய, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கும் சில முக்கிய கப்பல் வலையமைப்புகள், போர் அபாய வலயத்தில் அமைந்துள்ள செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாயை தவிர்த்து, தமது கொள்கலன்களை மாற்றியமைக்க கொழும்பு துறைமுகத்தை தெரிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு உலகளாவிய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் கொழும்பு துறைமுகத்திற்கு இருப்பதால், இந்த நிலைமையை நிர்வகிப்பதன் மூலம் அதன் நன்மையை தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |