ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயம் நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் நெருக்கடி நிலைமை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் முடியாத பட்சத்தில் உமாஓயா அபிவிருத்தித் திட்டத்தை எதிர்வரும் 24ஆம் திகதி திறந்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.