இணையவழி பரிமாற்றங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி (cryptocurrency) பயன்பாடு தொடர்பில் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஈரான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கிரிப்டோகரன்சி பயன்பாடு அண்மைக்காலமாக அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.
குறித்த செயற்பாடுகள் காரணமாக தேசிய நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
கிரிப்டோகரன்சி
இதனால் கிரிப்டோகரன்சி உடன் தொடர்புடைய அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் நிறுத்துவதற்கு ஈரான் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் சுமார் 10 மில்லியன் பயனாளர்கள் பிட்கொயின் மீது ரியால் நாணய அலகை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.