ஹமாஸ் (Hamas) தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் (Ismail Hania) படுகொலைக்கு பழி தீர்ப்பது உறுதி என தெரிவித்துள்ள ஈரான் (Iran), எவரும் கணிக்க முடியாத வகையில் அது இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரானிய இராணுவ அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் என்ற பதட்டத்திலும் பீதியிலும் தற்போதைக்கு இஸ்ரேல் (Israel) இருக்கட்டும் ஆனால் பதிலடி என்பது கணிக்க முடியாததாக இருக்கும் என்பது மட்டும் உறுதி என தெரிவித்துள்ளனர்.
தெஹ்ரானில் (Tehran) ஜூலை 31 ஆம் திகதி ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார்.
நட்பு நாடுகள்
ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை இஸ்ரேல் பொறுபேற்கவோ மற்றும் மறுக்கவோ இல்லை.
இருப்பினும், ஈரான் மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகள் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலைக்கு காரணம் இஸ்ரேல் என்றும் மற்றும் பழிவாங்க வேண்டும் என்றும் சபதமெடுத்துள்ளது.
தீவிரமான திட்டமிடல்
இதனிடையே, கடந்த வாரம் ஈரானின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், இஸ்மாயில் ஹனியாவின் படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவது என்பது தீவிரமான திட்டமிடலுக்கு அடுத்தே முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் (America) பென்டகன் தெரிவிக்கையில், உளவு அமைப்புகள் திரட்டியுள்ள தரவுகளின் அடிப்படையில் இஸ்ரேல் மீதான ஈரான் அல்லது ஹிஸ்புல்லாவின் (Hezbollah) தாக்குதல் அச்சுறுத்தல் நீடிப்பதாகவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.